முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி கல்வியியல் கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி  அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், "சாலை விபத்துகள் - முதலுதவி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:30 AM
பகிர்:

தூத்துக்குடி  அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், "சாலை விபத்துகள் - முதலுதவி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் குணசிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். தமிழ்நாடு செஞ்சிலுவைச் சங்க பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர்கள் ராஜேஷ், பெஞ்சமின் ஆகியோர், விபத்து நேர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னியராஜன், கல்லூரி செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் சுதா குமாரி, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.