நாகலாபுரம் அரசு கல்லூரியில் கருத்தரங்கு
நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக
நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக தமிழகமும் நீர் மேலாண்மையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் அருணாச்சலம், விஜயமோகனன் பிள்ளை, முத்துராஜா, ஹரிமோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் 13 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர் அன்னகுமார் நன்றி கூறினார்.