முகப்பு
தூத்துக்குடி

கிணறு தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை கிணறு தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 5:23 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை கிணறு தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். 
சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றை நாமக்கல்லைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது தலைமையில் 10 பேர் வந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை தூர்வாரும் போது கயிறு  அறுந்து விழுந்ததில்,  அங்கமுத்து மகன்கள் நாராயணன் (24),   ராமகிருஷ்ணன் (22) மற்றும் இன்னொரு அங்கமுத்து மகன் சுப்பிரமணியன் (29) ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்தனர்.  இதில் பலத்த காயமடைந்த 3 பேரும்  வெளியேற முடியாமல் தவித்தனர்.   தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு வீர்ரகள்,  கயிறு மூலம் கிணற்றில் இறங்கி 3 பேரையும் மீட்டு,  சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.