முகப்பு
தூத்துக்குடி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:09 AM
பகிர்:

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், குருவிகுளம் ஊரக வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரி முதவ்வர் சு.கிருஷ்ணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். 
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, அப்பனேரி கிராமத்தை சென்றடைந்தது.  
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி ஆகியோர் தூய்மை மற்றும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினர். 
ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மகேஷ்குமார், கவிதா மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.