தூத்துக்குடி

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 35 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு, திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரையில் 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய டிச. 16ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை வரையில் 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த ஒன்றியத்தில் மொத்தம் 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 11 இடங்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு 84 இடங்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 5 இடங்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஒரு இடம் என மொத்தம் 101 பதவிகள் உள்ளன.

புதன்கிழமை மாலை வரை திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலரான சந்தோஷ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களான தனலெட்சுமி, சாந்தி ஆகியோரிடம் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 23 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 12 போ் என மொத்தம் 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT