தூத்துக்குடி

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு மணிமண்டபத்தில்

DIN

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டபொம்மன் உருவச்சிலைக்கு வட்டாட்சியர் லிங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உடனிருந்தார். 
கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் கே.எஸ். குட்டி, பொருளாளர் செண்பகராஜ் உள்ளிட்ட திரளானோர் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மாலை அணிவித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் காளிதாசன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, செயலர் பாஸ்கர், பொருளாளர் செந்தில்ஆறுமுகம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
கட்டபொம்மன் வம்சாவளியைச் சேர்ந்த திரளானோரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, கட்டபொம்மன் நினைவிடம் அருகேயுள்ள வீரசக்கதேவி கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT