பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலிலில் 4508 திருவிளக்கு பூஜை
குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை சந்திரா அம்மாள் தொடங்கிவைத்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் தர்மகத்தா ஜெயராகவன், விஜயராகவன், சண்முகத்துரை, வெள்ளைக்கண்ணு, ஐஓபி முருகன், ஒம் சக்தி தியாகராஜன், சிற்பி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் முத்துக்குமார் செய்திருந்தார்.
இக்கோயில் வளாகத்தில் கொடிமரம் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்.10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கொடிமரம் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகின்றன.