முகப்பு
தூத்துக்குடி

முக்காணியில் கிராமசபைக் கூட்டம்: கனிமொழி பங்கேற்பு

முக்காணியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

Updated On : 23 ஜனவரி 2019, 6:00 am IST
பகிர்:

முக்காணியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 
இக் கூட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது:  கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் மீது கொண்ட அக்கறையால் ரூ. 9 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.   
 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பளிப்பதாக உறுதியளித்து மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.  மத்திய அரசுக்கு தமிழகத்தை பிடிக்காததால் மக்கள் ஏற்காத திட்டங்களை கொண்டு வருகின்றனர்.  சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகியிருக்கும். 
 திமுக ஆட்சிக்கு வந்ததும்  மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.  வரும் மக்களவைத் தேர்தலிலிலும், சட்டப்பேரவை த் தேர்தலிலிலும் திமுக வை ஆதரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில்,  எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி துணைச் செயலர் உமரி சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன்,  பொதுக்குழு உறுப்பினர் சொர்ணக்குமார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன்,  ஒன்றியச் செயலர்கள் ரவி, நவீன்குமார், முக்காணி செயலர் நட்டார், முன்னாள் எம்பி ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், முக்காணி அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்,   கூடுதல் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும்,  முக்காணியில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்  பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.