தூத்துக்குடி

பனைமர விதைகள் நடும் பணி

DIN

திருச்செந்தூரில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நிலத்தடி நீரை பாதுகாக்கவும்,  அழிந்துவரும் கருப்பட்டி தொழிலை காப்பாற்றவும், ஏழை, எளிய பெண்கள் வாழ்க்கை திறனை மேம்படுத்தப்பகூடிய பாய்முனைதல், பெட்டிசெய்தல் போன்ற தொழிலை வளர்க்கவும்,  பதனீர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பனைமரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கவும் திருச்செந்தூர் நல்வாழ்வு சமூக சேவை நிறுவனம் சார்பில் திருச்செந்தூர், நத்தக்குளம் வடிகால் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நல்வாழ்வு சமூக சேவை நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.   அலுவலர்கள் சுப்புதுரை, இசக்கிபாலன், இசக்கிசெல்வன், சிவநாதன், மாசானமுத்து, நூலகர் மாதவன், சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகர் சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT