தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டி: முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

DIN

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் வியாழக்கிழமை பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
2011, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஜீ.வி. மார்க்கண்டேயன். 
2016இல் இத்தொகுதியில் போட்டியிட மார்க்கண்டேயனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இவர், அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக பதவியில் இருந்தார்.
இதனிடையே, இத்தொகுதியின் எம்.எல்.ஏ. தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து விளாத்திகுளம் தொகுதிக்கு ஏப். 18இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தொகுதியில் அதிமுக சார்பில் சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜீ.வி.மார்க்கண்டேயன் கடந்த 19ஆம் தேதி கட்சியின் நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர், கட்சியின் தலைமை மீது புகார் தெரிவித்த அவர், அதிமுகவில் தான் வகித்து வந்த செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 2 நாள்களாக தொகுதியில் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை விளாத்திகுளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த மார்க்கண்டேயன், தனது ஆதரவாளர்களுடன் சென்று அம்மன் சன்னதி தெருவில் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தியதன்பேரில்,  விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். நான் 5 ஆண்டு தொகுதி மக்களுக்கு செய்த நலத் திட்டங்களை தெரிவித்து வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT