தூத்துக்குடி

நாசரேத் பகுதியில் கனிமொழி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை குரும்பூர் அழகப்பபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

DIN


தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை குரும்பூர் அழகப்பபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அவர், புதுக்கிராமம், காரவிளை, சோழியக்குறிச்சி, சேதுசுப்பிரமணியபுரம், சேதுக்குவாய்த்தான், குரங்கணி, தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, மணல்மேடு, மணத்தி, கீழநாலுமாவடி, பணிக்கநாடார்குடியிருப்பு, பாட்டக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில், கால்பந்து விளையாட்டுக்கு புகழ் பெற்ற நாசரேத்தில் தரமான கால்பந்து மைதானம் அமைக்க பாடுபடுவேன் என்றார்.
வேட்பாளருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.டி.பி.செளந்தர், கிழக்கு ஒன்றியச் செயலர் நவீன்குமார், நாசரேத் நகரச் செயலர் ரவி செல்வக்குமார், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சா.மாமல்லன், எஸ்.டி.பி. தாமரைசெல்வன், வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. கிருஷ்ணராஜ், நாசரேத் நகர திமுக பொருளாளர் எஸ்.சுடலைமுத்து, காங்கிரஸ் பிரமுகர்கள் ரவி ராஜா, சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT