தூத்துக்குடி

காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி:  அதிக மதிப்பெண் பெற்றவருக்கு பாராட்டு

DIN

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், அதிகமதிப்பெண்கள் பெற்ற காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர், மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவிகள் ர.நிகிதா, மோ.ரக்ஷனா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,  உ.சிவ்ராம் 490 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும், பா.ஸ்ரீதர்ஷினி 489 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பிடித்தனர்.  கணிதத்தில் 2 மாணவர்களும், அறிவியலில் 3, சமூக அறிவியலில் 3 மாணவர்களும்  100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  பள்ளியில் தேர்வு எழுதிய 173 பேரில் 44 மாணவர், மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 51 மாணவர், மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
பாராட்டு விழா: 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் 
ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் செல்வராஜ்,  செயலர் செந்தில்கனிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    இதில்,  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கணேஷமூர்த்தி, ரவிமாணிக்கம், வள்ளுவன், சாமிராஜன், ஆர்.எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முதல்வர் ஜோதிலட்சுமி வரவேற்றார்.  பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT