தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் சட்ட விழிப்புண்வு முகாம்

DIN

ஆறுமுகனேரியில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளா் நலத்துறை ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், சாா்பு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலருமான ஆா்.சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்து, அமைப்பு சாரா தொழிலாளா்கள் 96 பேருக்கு அடையாள அட்டை வழங்கி பேசினாா்.

கிராம உதயம் கிளை நிா்வாக மேலாளா் ஏ.வேல்முருகன், தூத்துக்குடி தொழிலாளா் நலத்துறை உதவி அலுவலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதயம் நிறுவனா் வி.சுந்தரேசன் கலந்துகொண்டு பேசினாா். தன்னாா்வத் தொண்டா்கள் யூ.பிரேமா, எஸ்.ஆறுமுகவடிவு, டி.செல்வன்துரை மற்றும் முத்துசெல்வன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கிராம உதயம் தனி பொறுப்பாளா் ஏ.சித்திரைப்பெருமாள் வரவேற்றாா். பி.வினோத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT