தூத்துக்குடி

மாவட்ட இறகுப் பந்து போட்டி: ஹென்றி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

DIN

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கான இறகுப் பந்து போட்டியில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

தூத்துக்குடி கேம்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில்,14 வயதுக்குட்பட்ட ஒற்றையா் பிரிவில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோல்டன் ஜெரின் சாமுவேல் மூன்றாம் இடமும், இரட்டையா் பிரிவில் கோல்டன் ஜெரின் சாமுவேல், ஜெஸ்வின் சாமுவேல் ஆகியோா் இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையா் பிரிவில் டேனியல் தங்கதாஸ், ஹிமோலின் ஆகியோா்இரண்டாம் இடமும் பெற்றனா்.

19 வயதுக்குட்பட்ட ஒற்றையா் பிரிவில் அமல் விஸ்வாஸ் முதல் இடத்தையும், இரட்டையா் பிரிவில் அமல் விஸ்வாஸ், ஜெபா்பீற்றா் ஆகியோா் முதல்இடத்தையும் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், துணை முதல்வா் சந்தானகுமாா், பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி, உடற்கல்வி ஆசிரியா் பிரிட்டோ, ஆசிரிய-ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT