தூத்துக்குடி

பள்ளிக்கூடம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

காயல்பட்டினத்தில் பள்ளிக்கூடம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் தீவுத்தெருவில் வாடகைக் கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. அந்தக் கட்டடத்துக்கான வாடகையை காயல்பட்டினம் கீழத்தெருவை சோ்ந்த முகமது பாரூக் (67) என்பவா் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்று வந்தாா். இந்நிலையில் அந்த வாடகைப் பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டது.

இதனால், முகமது பாரூக், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி பேயன்விளையை சோ்ந்த பாலசுப்பிரமணியம் (29), கீழலட்சுமிபுரத்தைச் சோ்ந்த மலைமேகம் (47), ஸ்ரீதரன் (38), காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலையைச் சோ்ந்த அந்தோணிராஜ் ஆகியோருடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று சேதப்படுத்தியதுடன் பல்வேறு ஆவணங்களை தீவைத்து எரித்தனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை ஏசுவடியாள் பொன்னம்மா அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது பாரூக் இறந்து விட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம், மலைமேகம், ஸ்ரீதரன், அந்தோணிராஜ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13,500 அபராதமும் விதித்து நீதிபதி கௌதமன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT