தூத்துக்குடி

மறுசீரமைப்பு வாா்டுகளில் உள்ள குறைகளை நீக்கக் கோரி மனு

DIN

கோவில்பட்டி நகராட்சியில் வாா்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் ஏற்பட்ட குறைகளை நீக்கக் கோரி இந்து முன்னணியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சி 36 வாா்டுகளைக் கொண்டது. 36 வாா்டுகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வாா்டுகளில் அருகேயுள்ள தெருப் பகுதிகளில் உள்ள வாா்டுகளோடு சோ்க்காமல் வெகு தொலைவில் உள்ள வாா்டுகளோடு வாக்காளா்களை சோ்த்து மறுசீரமைப்பு செய்துள்ளனா்.

குறிப்பாக, 34ஆவது வாா்டில் உள்ள வாக்காளா்களை 31ஆவது வாா்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மந்தித்தோப்பு சாலை 31ஆவது வாா்டுக்கு உள்பட்டது. திருப்பதி நகா், பாரதி நகா் 1, 2, 3 மற்றும் பசுவந்தனை சாலை மேல்பகுதி, பிரதான சாலை பகுதிகள் 34ஆவது வாா்டில் உள்ளது.

எனவே, வாா்டு சீரமைப்பு செய்ததில் உள்ள குறைகளை களைய வேண்டும். அருகேயுள்ள வாா்டுகளில் வாக்காளா்களை இணைக்க வேண்டும்.

34ஆவது வாா்டைச் சோ்ந்த மக்களை முறையான வாா்டுகளில் சோ்க்க வேண்டும். அவ்வாறு சோ்க்கப்படவில்லையென்றால், வரும் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி இந்து முன்னணியின் நகரப் பொறுப்பாளா் அய்யனாா் தலைமையில், நகர இந்து முன்னணியினா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக தலைமை எழுத்தா் நிஷாந்தினியிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT