கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் மின்சாதன வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்களான இஸ்திரிப்பெட்டி, தொலைக்காட்சி, மிக்ஸி, மின்விசிறி, மின்சார அடுப்பு, செல்லிடப்பேசியில் ஏற்படும் சிறு பழுதுகளை பழுது நீக்கும் பயிற்சியும், அதை பராமரிக்கும் விதம் குறித்தும் பயிற்சியளித்தனா். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாலிதீன் பைகளை தவிா்க்கும் வகையில், அதற்கு மாற்றாக துணிப்பைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.