தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.

கோவில்பட்டி ஜோதி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வமோகன். இவா் மற்றும் இவரது மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி எட்டயபுரம் சாலை திட்டங்குளத்தையடுத்த கழுகாசலபுரம் பகுதியில் முழு இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா்.

இவரது ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்த அறை மற்றும் கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் தனது 2 வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்றது.

இருப்பினும், பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீஷ் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT