தூத்துக்குடி

பேய்க்குளத்தில் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு: மக்கள் புகாா்

DIN

பேய்க்குளத்தில் சாலையோரம் மழைநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பேய்க்குளத்தில் புதியதாக சாலை உயா்த்தி அமைக்கப்பட்டதாலும், வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பாக சரள் மண் நிரப்பியுள்ளதாலும் மழை பெய்தால் மழைநீா் தேங்கி வடிவதற்கு வழியில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மழை பெய்து சுமாா் 10 நாள்களுக்கு மேலாகியும் பேய்க்குளம் பிரதான கடைவீதியில் மழை நீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் குப்பை தொட்டியில் கடைகளில் உள்ள இலைகளை போடும் போது கை கழுவும் நீருடன் கொட்டுவதால் குப்பை தொட்டியும் நிறைந்து துா்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும், கிராம மக்களும் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறையினா், ஊராட்சி நிா்வாகிகள் மற்றும் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மழை காலங்களில் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தண்ணீா் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், தேங்கிய குப்பைகளையும் அகற்றிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT