தூத்துக்குடி

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும்:தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பேட்டி

DIN


தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் வலியுறுத்தினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் ரவிசங்கர் கட்டாரியா, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை, சேலம்,  நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5,000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் பன்னிரண்டு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதுபோல தமிழகத்திலும் உண்டு உறைவிடப் பள்ளிகள்  நடத்தப்பட வேண்டும்.
ஆணையத் தலைவர் தலைமையில் கடந்த 26 ஆம் தேதி நடந்த தெற்கு மண்டல மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில், பட்டியலின மக்களுக்கான நிலுவை வழக்குகள் மற்றும்  தீர்வுத் தொகை வழங்கப்பட வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT