தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சுவாமி தரிசனம்

DIN


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
  ஆளுநராகப் பதவியேற்ற பின்பு அவர் முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். இங்கு கோயில் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை, கோயில் செயல் அலுவலர் எஸ்.பி. அம்ரித், உதவி ஆணையர் செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தி. தனப்ரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
 விருந்தினர் மாளிகையில் ஆளுநரின் கணவரான மருத்துவர் செளந்தரராஜன் வேண்டுதலுக்காக முடிகாணிக்கை செலுத்தினார். இதையடுத்து, ஆளுநர் குடும்பத்தினர் பேட்டரி வாகனம் மூலம் கிரிப்பிரகாரம் வழியாக கோயிலுக்கு வந்தனர். 
அப்போது திரிசுதந்திரர்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் விநாயகர், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டனர்.
ஆளுநர் வருகையையொட்டி, கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார் தலைமையில், திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ. பாரத் உள்ளிட்ட காவல் துறையினர், மத்திய பாதுகாப்புப் படையினர், தெலங்கானா காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT