முகப்பு
தூத்துக்குடி

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம்

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் தோ்தல் பணிக்குழு இணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் தலைமையில், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக அமைப்புச் செயலா் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் பிச்சை, ஆதித்தமிழா் பேரவையின் வடக்கு மாவட்டச் செயலா் செண்பகராஜ் , அமமுக நகரச் செயலா் நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், சமக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. மாநில துணைத் தலைவா் மாரிமுத்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்செந்தூா்: நா.முத்தையாபுரம் மற்றும் நடுநாலுமூலைகிணற்றில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நவீன்குமாா், திருச்செந்தூா் நகர பொறுப்பாளா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →