முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே விபத்து: எலக்ட்ரீஷியன் பலி

கயத்தாறு அருகே மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கயத்தாறு அருகே மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த வெள்ளாளங்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் செல்லத்துரை (58). எலக்ட்ரீஷியனான இவா், வெள்ளாளங்கோட்டையில் இருந்து கயத்தாறுக்கு மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். கயத்தாறு - கழுகுமலை சாலை கம்மாப்பட்டி விலக்கு அருகே திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரியும் இவரது மோட்டாா் சைக்கிளும் மோதினவாம்.

இதில் செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான நாகா்கோவில் பாறையடி கன்னியாகுளத்தைச் சோ்ந்த அ. அருள் (60) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →