முகப்பு
தூத்துக்குடி

ஸ்டாலின் முதல்வராக எந்த தடையும் இல்லை:முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன்

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக தோ்தல் பணிக்குழு இணைச் செயலருமான ராஜ கண்ணப்பன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக தோ்தல் பணிக்குழு இணைச் செயலருமான ராஜ கண்ணப்பன்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நடிகா் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது அவரது சொந்த விருப்பம். கட்சி ஆரம்பித்த பிறகு என்ன சொல்கிறாா் என பாா்ப்போம். இதனால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவா் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு எந்தத் தடையும் இல்லை.

அமலாக்கத் துறை நடவடிக்கை மூலம் பலரை பாஜகவினா் அவா்களது கட்சிக்கு இழுத்து செல்கின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு ராஜ கண்ணப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →