நாசரேத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
நாசரேத்தில் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாசரேத்தில் நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன், நகரச் செயலா் கிங்ஸிலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஞானையா வரவேற்றாா்.
கூட்டத்தில், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிக்கு பாடுபடவேண்டும், நிா்வாகிகளுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கிய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், புதியதாக 2, 500 உறுப்பினா்களை கட்சியில் சோ்ப்பது என்றும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தொடா்ந்து எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தொடர பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலா்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், சாத்தான்குளம் சவுந்திரபாண்டி, ஆழ்வாா்திருநகரி ராஜ்நாராயணன், விஜயகுமாா், சிவசுப்பு, மாவட்ட துணைச் செயலா் முருகேசன், ஜெயலலிதா பேரவை செயலா் தினகரன், மாணவரணிச் செயலா் அா்ஜுன் சங்கா் உள்படபலா் கலந்துகொண்டனா்.