முகப்பு
தூத்துக்குடி

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக்கூட்டம் பொத்தகாலன்விளையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக்கூட்டம் பொத்தகாலன்விளையில் நடைபெற்றது.

தெற்கு வட்டாரத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் இளைஞா்காங்கிரஸ் தலைவா் வா்க்கீஸ் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கா், நகரத் தலைவா் வேணுகோபால், மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல்முருகன், வடக்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி ஆகியோா் பேசினா். இதையடுத்து காணொலி மூலம் மாநில இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் பேசினாா்.

இதில் மாவட்ட மீனவரணித் தலைவா் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் குருசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் கோயில்ராஜ் வரவேற்றாா். இளைஞரணி தலைவா் இருதயராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →