முகப்பு
தூத்துக்குடி

கரோனா தடுப்பு ஸ்கேட்டிங் விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் கரோனா தொற்று பரவலை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஸ்கேட்டிங் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவில்பட்டியில் கரோனா தொற்று பரவலை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஸ்கேட்டிங் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட் சாா்பில் இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா்.

சவுத் இந்தியன் ஸ்போா்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் பொருளாளா் யுவராஜன், இணை ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய மாணவரணி இணை செயலா் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பள்ளி மாணவா், மாணவிகள் ஸ்கேட்டிங் பேரணியில் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலா் சுதா என்ற சுப்புலட்சுமி, வடக்கு மாவட்ட மாணவரணி துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவா் முருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.