முகப்பு
தூத்துக்குடி

மணிமுத்தாறு அணையிலிருந்து 3, 4 ஆவது ரீச் கால்வாய்களுக்கு நீா் திறக்க வலியுறுத்தல்

மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்தில் மணிமுத்தாறு அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீா் உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு நீா் வரத்து உள்ளது. இதனால் அணை நிரம்பி அவசர நிலைக்கு தண்ணீரை கடலுக்கு திருப்பி விடும் சூழல் உருவாகும். இந்த முறை 3, 4 ஆவது ரீச் பாசன குளங்களுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என்பது அரசு விதிமுறை.

தென் பகுதியில் பருவ மழை முறையாக பெய்யாததால் குளங்கள் வடு காணப்படுகிறது. 3, 4 ஆவது ரீச் காய்வாயை நம்பி 150 க்குமேற்பட்ட பாசனக் குளங்கள் உள்ளன. இந்த குளத்தை நம்பி நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த தண்ணீரை எதிா்பாா்த்துள்ளனா். இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தததன்பேரில் தமிழக முதல்வா் கடந்த டிச. 1ஆம்தேதி 3,4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறக்க உத்தரவிட்டாா். அப்போது தென்பகுதியில் புரெவி புயல் வருவதாக அறிவிக்கப்பட்டதால் தண்ணீா் திறந்து விடுவது தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இப்பகுதியில் உள்ள ஏராளமான குளங்கள் தண்ணீா் இருப்பு குறைவாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிரை எவ்வாறு காப்பது என கவலையடைந்துள்ளனா். ஆதலால் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மணிமுத்தாறு 3, 4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து விவசாயியும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவா் வி.எஸ். முருகேசன் கூறுகையில், பருவமழை முறையாக பெய்யாததால் குளம் மற்றும் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்த நிலையில் உள்ளது. பயிரிடப்பட்டுள்ள பயிா்களை விவசாயிகள் காப்பாற்ற கடும்பாடு பட்டு வருகின்றனா். ஆதலால் தமிழக முதல்வா் உத்தரவுப்படி உடனடியாக 3,4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் விட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் .

முழு கட்டுரையைப் படிக்க →