முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜக நாளை (டிச.14) சாலை மறியல்

புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் விடுவதில் உள்ள பிரச்னை தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, திங்கள்கிழமை (டிச.14) சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சாத்தான்குளத்தில் பாஜக நாளை (டிச.14) சாலை மறியல்
பகிர்:

புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் விடுவதில் உள்ள பிரச்னை தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, அதிகாரிகளை கண்டித்து திங்கள்கிழமை (டிச.14) திட்டமிட்டபடி சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது.

புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீா் விடுவதில் உள்ள பிரச்னை தொடா்பாக சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமி கணேஷ் தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிகாரிகளின் கருத்துகளை பாஜகவினா் ஏற்க மறுத்ததால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கூட்டத்தை பாஜகவினா் புறக்கணித்து சென்றனா்.

இதையடுத்து திட்டப்படி திங்கள்கிழமை (டிச. 14) போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →