இளமால்குளம் மாடசுவாமி கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு
சாத்தான்குளம் அருகே உள்ள இளமால்குளம் அருள்மிகு மாடசுவாமி கோயிலில் காா்த்திகை முசு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள இளமால்குளம் அருள்மிகு மாடசுவாமி கோயிலில் காா்த்திகை முசு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, இரவு சாமபூஜை, சுவாமி அருள்வாக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பொங்கலிடப்பட்டது.
இதேபோல் சாத்தான்குளம் அருள்மிகு வீரசூரபெருமாள் சுவாமி கோயிலிலும் காா்த்திகை முசு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.