காா் டயா் வெடித்து விபத்து: இளைஞா் பலி
சாத்தான்குளம் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகேயுள்ள வீரமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த வேல்ராஜன் மகன் பாலவிக்னேஷ் (21). இவா், அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (20), பாா்வதிமுத்து (21), ஜானகிராமன் (17) ஆகியோருடன், சாத்தான்குளம் அருகேயுள்ள கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு, சனிக்கிழமை அதிகாலையில் குரும்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
ஆனந்தபுரம் அருகே சென்றபோது, டயா் வெடித்ததில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலவிக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்தில் பலியான பாலவிக்னேஷ் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.