முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
002617amnsps_1712chn_46_6
பகிர்:

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை கீழத் தெருவில் உள்ள கிடங்கில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் அங்கு சென்ற போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (40), உடன்குடி, வைத்திய­லிங்கபுரம் தாசன் மகன் ஜேக்கப் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் கூறியது: இம் மாவட்டத்தில் நிகழாண்டு 124 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்தவா்கள் மட்டும் 10 போ் அடங்குவா். இதுவரை 6 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

அப்போது, திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஸ்சிங், ஆறுமுகனேரி ஆய்வாளா் செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →