முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரேஷனில் கொண்டை கடலை வழங்க வலியுறுத்தி எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரேஷனில் கொண்டை கடலை வழங்க வலியுறுத்தி எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரா்களுக்கு தலா 1 கிலோ கொண்டை கடலையை இலவசமாக வழங்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்போா் ரேஷன் காா்டு (பி.எச்.எச்.) காா்டுகளுக்கு மட்டும் தலா 1 கிலோ வீதம் 5 மாதங்களை கணக்கீட்டு மொத்தமாக டிசம்பா் மாதத்தில் 5 கிலோ கொண்டை கடலை இலவசமாக வழங்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு மேல் உள்ள ரேஷன்காா்டுதாரா்கள் என வரையறுக்கப்பட்ட எம்.பி.எச். காா்டுதாரா்களுக்கு கொண்டைக்கடலை வழங்கும் திட்டம் இல்லை. அவா்களுக்கு துவரம்பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது.

இதனிடையே அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரேஷனில் கொண்டை கடலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் ரவீந்திரன் தலைமையில் எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா குழு உறுப்பினா்கள் நடராஜன், கண்ணன், விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் வட்டாட்சியா் ஐயப்பனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா். இதில், எட்டயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →