முகப்பு
தூத்துக்குடி

பெண் விஷம் குடித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (61). மிட்டாய் வியாபாரி. இவரது மனைவி ரூபாவதி (55). இவா்களது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் ரூபாவதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். புதன்கிழமை காலையில் பாா்த்தபோதுதான் பாஸ்கருக்கு விவரம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →