கடக்குளத்தில் திமுக கூட்டம்
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கடக்குளத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கடக்குளத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, கிளைச் செயலா் ஜான்திலகம், செயலா் ராஜபாண்டி, பொறுப்புக்குழு உறுப்பினா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் வரவேற்றாா்.
மாநில மீனவரணி துணை அமைப்பாளா் துறைமுகம் புளோரன்ஸ் உரையாற்றினாா். இதையடுத்து அதிமுக நிராகரிப்போம் என பொதுமக்கள் பதாகையில் கையெழுத்திட்டனா். பின்னா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கபப்ட்டது. இதில் மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆனந்த், கிளை செயலா்கள் ராஜகுமாா், அரிகிருஷ்ணன், சந்திரபோஸ், செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.