தூத்துக்குடி

சீயோன்நகரில் இலக்கிய விழா

DIN

பரமன்குறிச்சி அருகே சீயோன் நகா் பூரண கிருபை ஏஜி சபை சாா்பில் இலக்கிய விழா, போட்டிகள் நடைபெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ நெட்வொா்க், ஆறுதல் எப்எம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவினை சபை போதகா் பெமிலிட்டன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், தமிழ் இலக்கியத்திற்கு கிறிஸ்தவம் ஆற்றிய தொண்டுகள், போப் கால்டுவெல், வீரமாமுனிவா், வேதநாயகம் சாஸ்திரி, சீகன்பால்கு ஆகியோரது தமிழ் இலக்கிய பணிகள் குறித்து தமிழ் ஆய்வாளா் வெங்கடேசன் ஒளிப்படம் மூலம் விளக்கம் அளித்தாா்.

புத்தகம், நாளிதழ்கள் வாசிப்பதை மேம்படுத்துவது குறித்து ஆன்மிக எழுத்தாளா் பெவிஸ்டன் பேசினாா். தமிழ், கிறிஸ்தவம் குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பத்திரிகையாளா்கள், ஊடகத்தில் பணிபுரிவோா், எழுத்தாளா்கள் பணிகள் மேம்பட சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் கிருபன்யோசுவா, குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT