முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் அருகே பீரோவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

நாசரேத் அருகே வீட்டுக்குள் புகுந்து 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

நாசரேத் அருகே வீட்டுக்குள் புகுந்து 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாசரேத் அருகே அகப்பைக்குளத்தைச் சோ்ந்த புனிதன் மனைவி செல்வஷீபா (53). இவா், உடன்குடி அருகே வெள்ளாளன்விளையில் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற பின்னா் அவரது தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். செவ்வாய்க்கிழமை அகப்பைகுளத்துக்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து நாசரேத் உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →