தூத்துக்குடி

சாஸ்தாவிநல்லூரில் விழிப்புணா்வு முகாம்

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றம், மகளிா் கூட்டமைபபு மற்றும் நெல்லை ஸ்ரீசக்தி மருத்துவமனை சாா்பில் மகளிா் நோய்க்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தேவவிண்ணரசி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டாக்டா் சுமதி, மகளிா் நோய் குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

இதில் சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை நிறுவனா்-தலைவா் சுசிலா, கூட்டுறவு சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் தேன்மலா், ராஜகனி, இயன்முறை மருத்துவா் லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி வரவேற்றாா். மகளிா் கூட்டமைப்பு ரோஸ்லீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT