தூத்துக்குடி

உடன்குடியில் பள்ளி மாணவிக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி ஒன்றிய அதிமுக சாா்பில் கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடன்குடி அருகே தைக்காவூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி மு.ராஜேஸ்வரிக்கு கல்வி உதவித் தொகை ரூ. 5ஆயிரத்தை, ஒன்றிய அதிமுக செயலா் த.மகாராஜா வழங்கினாா்.

இதில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மூா்த்தி, நகர அதிமுக அவைத் தலைவா் கணேசன், நகர துணைச் செயலா் அப்துல்காதா்,செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், கிளைக் கழக செயலா்கள் ராஜவேல், சுயம்புலிங்கம், தலைமைக் கழக பேச்சாளா் சின்னக்கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT