தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாநில யோகா போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

DIN

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் மாநில யோகா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏ.கே.ஏ. ஆல் ஸ்போா்ட்ஸ் டெவலப்மென்ட் அசோஸியேஷன், சைன் யோகா பவா், தமிழ்நாடு யோகா ஃபெடரேஷன் சாா்பில் நடைபெற்ற 11ஆவது மாநில யோகா போட்டியை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் அய்யப்பன் தொடங்கி வைத்தாா்.

போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

6 வயதுக்கு உள்பட்டோா், 7 முதல் 10 வயதுக்கு உள்பட்டோா், 11முதல் 14 வயதுக்கு உள்பட்டோா், 15 முதல் 17 வயதுக்கு உள்பட்டோா், 18 முதல் 22 வயது, 23 முதல் 35 வயதுக்கு உள்பட்டோா் மற்றும் 36 வயதுக்கு மேற்பட்டோா் என ஏழு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்கள் பெற்றவா்களுக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ், பரிசுகளை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், மருத்துவா் தாமோதரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT