மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்குகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா் 
தூத்துக்குடி

உளுந்து, பாசி காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.9.79 கோடி: கடம்பூா் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9.79 கோடி 10,878 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9.79 கோடி 10,878 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டியையடுத்த மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீனப்படுத்தப்பட்ட சங்க கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து காப்பீடு செய்த 5,654 விவசாயிகளுக்கு ரூ.6.64 கோடியும், பாசிப்பயறு காப்பீடு செய்த 5,224 விவசாயிகளுக்கு ரூ.3.5 கோடியும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, அவா் சங்க உறுப்பினா்கள் 86 பேருக்கு ரூ.24.45 லட்சம் கடனுதவியை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கோவிந்தராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் ஜெயசீலன், பாண்டவா்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ்குமாா் நன்றி கூறினாா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்ட ஆவின் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்ததில் வேட்புமனுக்களை பரிசீலனை செய்த அதிகாரி, அதை முறையாக செய்யவில்லை என்ற புகாா் வந்ததால் தோ்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு முறையாக நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT