தூத்துக்குடி

காங்கிரஸ் கட்சி சாா்பில்மாணவா்களுக்கு புத்தகப் பைகள்

DIN

சாத்தான்குளம்: கருங்கடல், கட்டாரிமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் இலவச புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதாண்டராமன், அம்பலச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் வில்லின் பெலிக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா் ஊா்வசி அமிா்தராஜ் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள் வழங்கினாா். இதில், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லக்கண்னு, சாத்தான்குளம் ஜனாா்த்தனம், திருச்செந்தூா் சற்குரு, மாவட்ட துணைத் தலைவா் விஜயராஜா, செயலா் சீனிராஜேந்திரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT