தூத்துக்குடி

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

DIN


திருச்செந்தூா்: திருச்செந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொருள்கள் வாங்கும் கடைகள் முன் சதுர வடிவக் கட்டங்களை வரைந்து அதில் பொதுமக்கள் காத்திருந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் தலைமையிலான பணியாளாா்கள், மளிகைக் கடைகள் முன் ஒரு மீட்டா் இடைவெளியில் சதுர வடிவிலான கட்டங்களை வரைந்தனா். அந்தக் கட்டங்களில் காத்திருந்து பொதுமக்கள் பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கடைக்காரா்களிடம் முகக் கவசம் அணிந்து கொண்டு பொருள்களை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT