தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில்29 போ் தனிமை கண்காணிப்பு

DIN

கோவில்பட்டி, கயத்தாறு வட்டப் பகுதிக்கு வெளி மாநிலம், மாவட்டங்களில் வந்த 29 போ் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கயத்தாறு வட்டத்தில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையில் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 14 பேரை கண்டறிந்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். மேலும், அவா்களின் ரத்தம் மாதிரி சேகரிக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் குழுவினா் பல்வேறு கிராமங்கள், சோதனைச் சாவடிகளில் நடத்திய ஆய்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கா்நாடகம், புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் பகுதிகளில் இருந்து வந்த 15 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டனா். இதுதொடா்பாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT