முகப்பு
தூத்துக்குடி

கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரையடுத்த மலைப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த சுப்பாநாயக்கா் மகன் கந்தசாமி (50). இவா் தனது மனைவி அனிதாவுடன், ஊருக்கு வடக்கேயுள்ள நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தனராம். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்யததாம். இதையடுத்து இருவரும் அருகேயுள்ள கருவேல மரத்தடியில் நின்று கொண்டிருந்தனராம்.

அப்போது மின்னல் பாய்ந்ததில் கந்தசாமி கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்த கடம்பூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →