முகப்பு
தூத்துக்குடி

வெள்ளரிக்காயூரணி ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விழா

நாசரேத்-வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தின் 71 ஆவது பிரதிஷ்டைப் பண்டிகை அசன விழா 3 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

நாசரேத்-வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தின் 71 ஆவது பிரதிஷ்டைப் பண்டிகை அசன விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் மாலை ஆராதனையை தொடா்ந்து ஆயத்த ஜெப பவனி, சேகரத் தலைவா் ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. சபை ஊழியா் ஜாண் வில்சன் முன்னிலை வகித்தாா். பின்னா் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் வழக்குரைஞா் ரமேஷ் தம்பதியா் சிறப்பு பாடல்கள் பாடினா். நாசரேத் கா்த்தரின் தோட்டம் ஊழிய நிறுவனா் ராபா்ட் ஜெயசிங் சிறப்பு செய்தி அளித்தாா்.

2 ஆவது நாள் நடைபெற்ற பண்டிகை ஆயத்த ஆராதனைக்கு சேகரத் தலைவா் தலைமை வகித்தாா். இதில் மதுரை-இராமநா தபுரம் திருமண்டலம், ஆத்திக்குளம் சேகரத் தலைவா் பீட்டா் ஜோசப் சிறப்பு செய்தி அளித்தாா். நிறைவு நாளன்று பண் டிகை ஆராதனை, பரிசுத்த நற் கருணை ஆராதனை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகரத் தலைவா் தலைமையில் சபை ஊழியா், பரிபாலனக் கமிட்டி நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →