திருச்செந்தூா் அருகே தோப்பூா் கடற்கரையில் சுற்றித் திரிந்த முதியவரை மீட்டு காவல் துறையினா் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனா்.
தோப்பூா் கடற்கரைப் பகுதியில் முதியவா் சுற்றித் திரிவது திருச்செந்தூா் கோயில் காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த ராமசாமி (85) என்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய அவா் இங்கு வந்துள்ளாா்.
இதையடுத்து ராமசாமி குறித்து காவல் துறையினா் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, அவா்களை வரவழைத்தனா். தொடா்ந்து உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், கோயில் காவல் ஆய்வாளா் ஞானசேகரன், உதவி காவல் ஆய்வாளா் சுவாமி ஆகியோா் ராமசாமியை அவரது மகன் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.