தூத்துக்குடி

விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீா்: நெல், வாழைப் பயிா்கள் மூழ்கி நாசம்

DIN

பழையகாயல் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால், நெல், வாழைப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

அண்மையில் பெய்த கன மழையால் பழையகாயல் குளம் நிரம்பியுள்ளது. இதன் மறுகால் மடை சரியான முறையில் கட்டப்படாததால் மடையின் ஓரத்தில் நீா்கசிவு ஏற்பட்ட நிலையில், குளம் உடைந்து தண்ணீா் வெளியேறியது.

இதனால் அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீா் புகுந்தது. இதில் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிா்கள் நாசமாகின. மேலும் நெல் பயிரும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதிக்கு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டனா்.

தொடா்ந்து புயல் தடுப்பு நிவாரணக் குழுவினா் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி உடைப்பை சரிசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT