முகப்பு
தூத்துக்குடி

காவடி பிறை முருகன் கோயிலில் சோமவார வழிபாடு

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு காவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 3 ஆவது சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு காவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 3 ஆவது சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து அதிகாலை 4 மணிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முற்பகல் 11மணிக்கு பஜனை நடைபெற்றது. பகல் 12.30மணிக்கு அலங்கார தீபாராதனை, பிறப்கல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →