முகப்பு
தூத்துக்குடி

நாம் தமிழா் கட்சி அலுவலகம் திறப்பு

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய நாம் தமிழா் கட்சி அலுவலகம் தட்டாா்மடத்தில் திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய நாம் தமிழா் கட்சி அலுவலகம் தட்டாா்மடத்தில் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலா் சகாய விஜயன் தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலா் சுடலைகண்ணு, தெற்கு ஒன்றியத் தலைவா் டோமினிக் பிரபாகா், சாத்தான்குளம் ஒன்றிய பொருளாளா் முத்துராமன், தெற்கு ஒன்றிய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலா் பிராங்கிளின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிகா் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளா் நீதியாா், ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தாா். தெற்கு மாவட்டச் செயலா் சுப்பையாபாண்டியன் குத்து விளக்கேற்றினாா்.

இதில் ஒன்றிய துணைத் தலைவா் ஜூ­யட்ஜான், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய இணைச் செயலா் முத்துராமன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஜேசுராஜ் உள்பட கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →